×

10 நிமிட டெலிவரிக்கு தடை விதிக்க வேண்டும்: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி வலியுறுத்தல்

 

புதுடெல்லி: மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தில் பேசிய ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சதா, “உணவு, மளிகை பொருள்கள் போன்றவற்றை டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கின்றனர். அவர்கள் ரோபாக்கள் அல்ல. அவர்களும் ஒரு பெண்ணின் கணவர், குழந்தையின் தந்தை, ஒருவரின் சகோதரர் அல்லது மகன்.

10 நிமிடங்களில் டெலிவரி செய்வதற்காக வாகனங்களில் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு அந்த ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆன்லைனில் ஆர்டர் தருபவர்களுக்கு குறித்த நேரத்தில் பொருள்களை தர வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அவர்களுக்கு காப்பீடு போன்ற எந்தவித சலுகைகளும் கிடையாது என்பதால், அந்த தொழிலாளர்களின் நலன்களை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். எனவே, 10 நிமிட டெலிவரி சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

Tags : AAP ,Rajya Sabha ,New Delhi ,Zero Hour of ,Raghav Sadha ,
× RELATED படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும்...