×

நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு

நெல்லை: நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 05.12.2025 முதல் 31.03.2026 வரை 117 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பிசான பருவ சாகுபடிக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் இராதாபுரம் வட்டத்தில் உள்ள கோட்டைக்கருங்குளம், உறுமன்குளம், ராதாபுரம், கரைசுத்துப்புதூர், கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், முதுமொத்தான்மொழி மற்றும் திசையன்விளை ஆகிய கிராமங்களில் உள்ள 1744.55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags : Namayak ,Tirunelveli District ,Vizayanwila Circle ,Kottayakarunkulam Village Numbayaru Reservoir ,Namhiaru Reservoir ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...