×

கறம்பக்குடி ஐயப்பன் கோயிலில் 26ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை

 

கறம்பக்குடி, டிச. 3: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கேரளமாநிலம் சபரிமலை ஐயப்பன்கோயிலுக்கு கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள கோடிக் கணக்கான மக்கள் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை மாலை அணிந்து, இருமுடி ஏந்தி சபரிமலை செல்வர். சித்திரை உள்ளிட்ட மண்டல பூஜைகளிலும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வர். அதன்படி கார்த்திகை பிறந்தது முதல் கடந்த இரண்டு வாரங்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் சபரிமலை ஆண்டுதோறும் சென்று வழிபடுவோர், சபரிமலை செல்ல முடியாதவர்கள் என பல தரப்பினர் இணைந்து தங்களது ஊர்களிலேயே ஐயப்பன் கோயிலை அமைத்து வழிபடுவர்

Tags : Kuthuvilakku Puja ,Karambakkudi Ayyappan ,Temple ,Karambakkudi ,Thiruvilakku Puja ,Karambakkudi Dharma Sastha Ayyappan ,Pudukkottai ,Sabarimala Ayyappan Temple ,Kerala ,Tamil Nadu ,Andhra Pradesh ,Puducherry ,Telangana ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...