×

மர்ம நபர்கள் தாக்குதல்; பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் முன்னாள் கூட்டாளி சுட்டு கொலை

 

சண்டிகர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரை சேர்ந்தவர் இந்தர்பிரித்சிங் என்ற பரி(35). இவர் பஞ்சாப் தாதாவான லாரன்ஸ் பிஷ்ணோய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். பஞ்சாப், சண்டிகரில் ,கொலை, கொலைமுயற்சி, மிரட்டி பணம் பறிப்பு, கலவரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இந்தர்பிரித் சிங் நேற்று முன்தினம் இரவு சண்டிகரில் உள்ள கிளப் ஒன்றுக்கு காரில் சென்றுள்ளார். அங்கிருந்து காரில் திரும்பிய போது இன்னொரு நபரும் காரில் இருந்துள்ளார்.

கார் கிளம்பி சிறிது தூரம் நகர்ந்த போது அடையாளம் தெரியாத நபர் இந்தர்பிரித்சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த இந்தர் பிரித்தை சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். போலீசார் கூறுகையில், ரவுடி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

Tags : Punjab Dada ,Lawrence Bishnoi ,Chandigarh ,Inderpreet Singh ,Pari ,Punjab ,Punjab, Chandigarh… ,
× RELATED வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி...