- சென்னை
- டிட்வா
- சென்னை விமான நிலையம்
- அகமதாபாத்
- அந்தமான்
- மும்பை
- குவஹாத்தி
- புவனேஸ்வர்
- கொச்சி
- தில்லி
- கோயம்புத்தூர்
சென்னை: டிட்வா புயல் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இருந்து பிற்பகல் 2 மணி வரை 13 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த விமானங்கள் அகமதாபாத், அந்தமான், மும்பை, கவுகாத்தி, புவனேஸ்வர், கொச்சி, டெல்லி, கோவை, பெங்களூரு ஆகிய உள்நாட்டு விமானங்கள் ஆகும். அதேபோல், அதிகாலை 4.35 மணிக்கு இந்தோனேசியா செல்ல வேண்டிய சர்வதேச விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னைக்கு வரும் புனே, அந்தமான், புவனேஸ்வர், கவுகாத்தி, மும்பை, கொச்சி, ஜெய்ப்பூர், விஜயவாடா உள்ளிட்ட உள்நாட்டு 10 விமானங்கள் பிற்பகல் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இருந்து பிற்பகல் 2 மணி வரையில் 18 விமானங்கள் தாமதம் ஆனது.
உள்நாட்டு மற்றும் சிங்கப்பூர் செல்லும் 2 சர்வதேச விமானங்கள் என அனைத்தும் சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனது. சென்னை விமான நிலையத்திற்கு வருகை விமானங்கள் பிற்பகல் 2 மணி வரையில் 11 விமானங்கள் தாமதமாகின. மேலும் உள்நாட்டு விமானங்கள், சிங்கப்பூர், தோகா சர்வதேச விமானங்கள் என 10 விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமானது. புயல் மிரட்டல், கன மழை காரணமாக, பயணிகள் பெருமளவு வராததால் 23 விமானங்கள் நேற்று ஒரே நாளில் ரத்தானது. நேற்று பிற்பகல் 2 மணி வரையில் மழை பாதிப்பு காரணமாக, மொத்தம் 52 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
