கோபி: எடப்பாடிக்கு எதிராக மாஜி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியதால் அவரது வீட்டிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவியை அவர் அண்மையில் ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யின் தவெகவில் சேர்ந்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணி முதல் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. அதே நேரத்தில் அவருக்கு தவெக சார்பில் வட இந்திய பவுன்சர்கள் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
