- PAMAKA
- ராமதாஸ்
- காசிமுத்து மணிக்கம்
- வணிகர் முகவரி
- சென்னை
- திமுகா
- வர்த்தக செயலாளர்
- காசி முத்துமணிக்கம்
- பாஜா
- பால்தகரே
- உத்தவ் தாக்கரே
சென்னை: திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: பாஜ தான் செய்தது என குற்றம் சொல்லக்கூட முடியாத சூழலில் ராமதாஸ் வேதனையில் வாடுகிறார், அழுகிறார், கண்ணீர் சிந்துகிறார். மகாராஷ்டிராவில் பால்தாக்கரே. உத்தவ் தாக்கரே என தந்தை, மகன் ஆரம்பித்த கட்சியில் அப்பன் மறைவுக்குப்பின் மகன் உத்தவ்தாக்கரே தலைவராக, முதல்வராக இருந்த சூழலில் அவரிடமிருந்து ஆட்சி. கட்சியை பறித்தவுடன் வில் அம்பு சின்னத்தையும் அவரிடமிருந்து பிடுங்கி ரத்த சம்பந்தமில்லாத ஏக்நாத் ஷிண்டேவிடம், பாஜவின் தூண்டுதலால் தேர்தல் ஆணையம் கொடுத்தது போல, ராமதாஸ் ஆரம்பித்து, கால்கள் தேய சுற்றிச்சுற்றி வந்து அரசின் சலுகைகளை சமுதாயத்துக்கு பெற்றுத்தந்தவரிடமிருந்து கட்சியை, அவர் மகன் அன்புமணியிடம் பாஜ அரசு கொடுக்கிறது.
இப்படித்தான் தமிழ்நாட்டில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும், தங்களிடம் தரப்பட்ட இரண்டு துண்டு சீட்டில், ஒன்றில் பொதுச்செயலாளராக சசிகலாவையும், மற்றொரு சீட்டில் முதல்வராக அதே சசிகலாவையும் தேர்ந்து எடுத்தார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட மாறி வாக்களிக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்த அடுத்த நாளே சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைக்காமல், பதினைந்து நாள் இழுத்தடித்து, மகாராஷ்டிராவிலேயே கவர்னர் வித்யாசாகரை தங்கவைத்து, வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை கொடுக்கவைத்து,
அதன்பின் எடப்பாடியை முதல்வராக்கும் சூழலை ஏற்படுத்தி சசிகலாவை முதல்வர் ஆக்கவிடாமல் பாஜ சதி செய்ததுடன், பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை, அதிலிருந்து நீக்கிவிட்டு,இரட்டை இலை சின்னத்திற்காக தினகரனை லஞ்சம் கொடுக்க வைத்து, அவரை சிறைக்கு அனுப்பி இரட்டை இலையை சசிகலா, தினகரனிடமிருந்து பறித்து, எடப்பாடியிடம் கொடுக்க வைத்தது பாஜ. இன்று பாமக நிறுவனர் உயிருடனிருக்கும்போதே அங்கீகாரம் இழந்த பாமக கட்சியை ராமதாஸிடம் இருந்து பிடுங்கி, திருடி அவர் மகனிடம் கொடுப்பது தவறு. அம்பாக தேர்தல் கமிஷன் இருந்தாலும், வில் பாஜ தானே. சட்டை யாருடையது, தீர்ப்பு யாருடையது என்பதல்ல – மாப்பிள்ளை யார் பாஜ தானே. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
