×

தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் சீறிப்பாயும் தண்ணீர்: பொதுமக்கள் குளிக்க தடை

 

ஊத்துக்கோட்டை, டிச.1: பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பெரிய அளவிலான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பனை மழை காலத்தில் தண்ணீர் நிரம்பினால் ஒரு பகுதி சோழவரம் ஏரிக்கும் மற்றொருபுறம் கடலுக்கும் செல்லும்.
இந்நிலையில், தாமரைப்பாக்கம், செம்பேடு, வெள்ளியூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து கடந்த மாதம் முதலில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர், படிப்படியாக உயர்த்தி 4500 கன அடி வீதம், அதன் பிறகு கூடுதலாக 2000 கன அடி என ஆக மொத்தம் 6500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக குறைத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று அணையின் பாதுகாப்பு கருதி 3500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் உள்ள தடுப்பணையில் நிரம்பி சீறிப்பாய்ந்து செல்கிறது. இந்நிலையில், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் அதிகமாக வருவதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் அணைக்கட்டில் இறங்கி குளிக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Thamaraipakkam dam ,Uthukkottai ,Periypalayam ,Cholavaram lake ,Thamaraipakkam ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...