×

பெரியவர்களுக்கு மட்டும் நடக்கும் பிரத்யேக விழா; குடிபோதையில் விடிய விடிய ஆட்டம் பாட்டம்: இங்கிலாந்தில் களைகட்டும் வித்தியாசமான நிகழ்ச்சி

லண்டன்: இங்கிலாந்தில் பெரியவர்கள் மட்டும் பங்கேற்கும் வித்தியாசமான கேளிக்கைத் திருவிழா ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ‘பட்லின்ஸ் பிக் வீக்கெண்டர்ஸ்’ என்ற பெயரில் பெரியவர்களுக்கான பிரத்யேக வார இறுதி கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இது சேறும் சகதியும் இல்லாத இசைத் திருவிழா என்றும், யாரும் யாரையும் மதிப்பிடாத சுதந்திரமான இடம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வருபவர்கள் தங்கள் கவலைகளை மறந்து குழந்தைகளைப் போலத் துள்ளிக்குதித்துக் கொண்டாடுவதற்காகவே இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை அரங்கம் மற்றும் கேளிக்கை விளையாட்டுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் இங்குப் படையெடுக்கின்றனர். இந்த வார இறுதி கொண்டாட்டங்களில் மது அருந்துவது, விதவிதமான ஆடைகளை அணிவது மற்றும் இடைவிடாத டான்ஸ் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

80கள் மற்றும் 90களின் இசைக்கு ஏற்ப விடிய விடிய நடனமாடுவதுடன், நீச்சல் குளம் மற்றும் கேளிக்கை விடுதிகளிலும் மக்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். தங்குவதற்குச் சொகுசான அறைகள் மற்றும் பாதுகாப்பான சூழல் இருப்பதால், நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் இங்கு குவிகின்றனர். இது குறித்துப் பங்கேற்பாளர்கள் கூறுகையில், ‘நாங்கள் இங்கு வரும்போது வயது வித்தியாசமின்றிச் சிறுவர்களைப் போலக் கொண்டாடுகிறோம்; கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்று தெரிவிக்கின்றனர். இங்கு வருபவர்கள் வித்தியாசமான மாறுவேடங்களை அணிந்து ஒருவருக்கொருவர் பழகிக்கொள்வதுடன், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மகிழ்ச்சியாக இருந்துவிட்டுச் செல்கின்றனர்.

Tags : Drunk Play Bottom: Tired and Weird ,UK ,London ,
× RELATED பங்குச்சந்தை முதலீட்டாளர்களின்...