×

திருஆடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

திருஆடானை அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் நான்கு யுகங்களிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தேவலோகத்தில் உள்ள அமுதத்தில் இருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் திருவாடானை என்றழைக்கப்படுகிறது.

சூரியனின் கர்வத்தை போக்கிய தலம் உள்ளது. ஒருமுறை சூரியன் தான் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரிய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய நந்தி பகவானிடம் பரிகாரம் கேட்டார். சுயம்புமுர்த்தியாக திருவாடானையில் இருக்கும் இறைவனை நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என கூறினார். ஆதியாகிய சூரியனை நீலரத்தினக்கல்லில் வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என்றானது. உச்சிக்காலத்தில் இவர் மீது பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நீலநிறத்தில் காட்சியளிப்பார்.

வருணனுடைய மகன் வாருணி ஒருநாள் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன் “வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும் பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே, பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்” என சாபமிட்டார். ஆடு + ஆணை என்பதால் இத்தலம ்வடமொழியில் அஜகஜபுரம் ஆனது.

தன் தவறை உணர்ந்த வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டிய நாட்டில் உள்ளது. அத்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினார். அதன்படி, வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.

இறைவனும் சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் என கேட்கிறார். கலிகாலம் முடியும் வரை இத்தலம் தன் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். பெரியவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் என கேட்கிறான். இந்த ஆடு + ஆணை புரம் என்றிருந்த ஊர் காலப்போக்கில் திருவாடானை என்றானது.

இந்த தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சுக்ரன், சனி நாமகரணம் செய்துள்ளது.

* சனி நான்காம் பாவகத்தில் உள்ளவர்கள் இங்குள்ள புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு எள்ளுருண்டை வெல்லமும் நைவேத்தியம் செய்து வழிபட்டு நைவேத்தியத்தை தானமாக வழங்கினால் நல்ல மனைவி அமைவார். நல்ல தொழில் அமைந்து வாழ்க்கை மேன்மேலும் வளர்ச்சி உண்டாகும்.
* ஆறாம் பாவகத்தில் குரு இருப்பவர்கள் இத்தலத்தில் குங்குமப்பூ பாலுடன் சேர்த்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைத்தால் அடகு வைத்த நகை வீடு திரும்பும் கடன், நோய் ஆகியவற்றிலிருந்து விடுபடுவார்கள்.
* 10ம் பாவகத்தில் சூரியன் திக்பலம் பெற்றிருந்தால் வறுத்த கோதுமை மாவில் வெல்லம் கலந்து ஒன்பது உருண்டைகள் உருட்டி சுவாமிக்கு நைவேத்தியம் செய்து மூன்று உருண்டைகளை கருப்புநிற பசுவிற்கு உணவாக கொடுத்தால் தொழில் உத்யோக மேன்மை உண்டாகும்.
* 12ம் பாவகத்தில் சூரியன் உள்ளவர்கள் 4 காப்பர் ஆணியை இங்கு வந்து சுவாமியிடம் வைத்து வழிபட்டு, பின்பு கட்டில் கால்களில் அடித்துவிட்டால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

மதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது.

Tags : Thiruadaanai ,Adhiratthineshwarar ,Temple ,Thiruadaanai Arulmigu Adhiratthineshwarar Temple ,Thiruavadanai ,earth ,
× RELATED அனைத்தையும் கடந்த ஞானிகள்!