- டி.கே.சிவகுமார்
- கர்நாடக
- முதலமைச்சர்
- சித்தராமையா
- துணை முதலமைச்சர்
- T.K.
- சிவகுமார்
- சித்தராமையா
- காங்கிரஸ் கட்சி
கர்நாடகா: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரிடையே வெடித்திருக்கும் மோதலால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 2023ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியபோது முதல் 2 அரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2 அரை ஆண்டுகள் டி.கே.சிவகுமாரும் முதலமைச்சராக இருப்பார்கள் என ஒப்பந்தம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக எந்த அதிகார பூர்வமான தொடர்புகள் இல்லை என்றாலும் சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்று 2 அரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவிகோரி அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர் கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக, டி.கே.சிவகுமார், சித்தராமையாவிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இருவரையும் டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் எக்ஸ் பக்கத்தில் டி.கே.சிவகுமார் பகிர்ந்துள்ள ஒரு கருத்து அரசியல் வட்டாரத்தில் கலவரத்தை கிளப்பி உள்ளது. அந்த பதிவில் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிக பெரிய சக்தி என குறிப்பிட்டுள்ளார். நீதிபதி, குடியரசு தலைவர் என யாராக இருந்தாலும் கொடுத்த வாக்கின்படி நடத்த வேண்டும் என்றும் கோரி உள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள சித்தராமையா மக்களை மேம்படுத்தாத எந்த வார்த்தையும் சக்தி அற்றது என குறிப்பிட்டார். கர்நாடக மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானது அல்ல என்றும் 5 ஆண்டுகள் முழுமையாக நீடிப்பதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இடையேயான வார்த்தை போர் அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

