×

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வெள்ளி யானை விருது

சென்னை: பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை’ விருது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
எனக்கு வழிகாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த விருதின் பெருமை சேரும். அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பாரத சாரண, சாரணிய வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரள் பேரணி திருச்சியில் நடத்தி இந்தியாவே வியக்கும்படி நடத்திக் காட்ட தமிழ்நாடு சாரணர்கள் செய்த பங்களிப்பின் விளைச்சல் தான் இந்த விருது. இந்த விருதை சாரணர்களின் உழைப்புக்கு அர்ப்பணிக்கிறேன். வெள்ளி யானை விருது தந்துள்ள உற்சாகத்தோடு தமிழக மாணவர்களின் நலனுக்கு மேலும் சிறப்பாக உழைக்க ஊக்கம் பெறுகிறேன்.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,Bharatiya Sarana and Scout Movement ,Tamil Nadu School Education ,Anbil Mahesh Poiyamozhi ,Minister Anbil Mahesh ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல்...