×

எஸ்ஐஆர் பணிச்சுமை கத்தியால் கையை கிழித்து ஆர்ஐ தற்கொலை முயற்சி

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் பகவதிராஜா (48). இவர் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், எஸ்ஐஆர் பணிகள் தொடங்கிய பிறகு தேர்தல் பிரிவு உதவியாளராக பணிபுரிந்து வருவதால் கூடுதலாக பணிச்சுமை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பகவதிராஜா கடந்த சில நாட்களாகவே விரக்தியில் இருந்து வந்தார்.

நேற்று அலுவலகத்திற்கு வந்த பகவதிராஜா பணியில் இருந்தபோது, திடீரென மேஜையில் இருந்த கத்தியை எடுத்து தனது இடது கையில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதேபோல் திண்டிவனம் நகராட்சி வருவாய் ஆய்வாளராக ஆனந்தனும் எஸ்ஐஆர் பணிச்சுமையால் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : RI ,Bhagavathiraja ,Rameswaram, Ramanathapuram district ,Ilayangudi Taluk Office ,SIR ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...