×

எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல்

கிருஷ்ணகிரி, நவ.27: கிருஷ்ணகிரியில் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடந்தது. கூட்டுறவுத்துறை சார்பில், தமிழகத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2,581 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி தேர்வு நடந்தது. இதை 56,800 பேர் எழுதினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை மத்திய கூட்டுறவு வங்கிகளில், 17 உதவியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 60 பணியிடம் உள்பட 77 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 920 பேர் கலந்து கொண்ட நிலையில், 180 பேர் தேர்ச்சி பெற்றனர். கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியில், நேற்று 4 கட்டங்களாக நடந்த நேர்காணலில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேர்காணல் நடத்தினர்.நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களோடு, தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து, சராசரி மதிப்பீட்டில் முதல் இடம் பிடித்த 77 பேரை தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அவர்களுக்காண பணியிடம் ஒதுக்கீடு அறிவிக்கப்படும். கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடராஜன், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சிவகுருநாதன் ஆகியோர்

Tags : Krishnagiri ,Cooperative Department ,Central Cooperative Banks ,Tamil Nadu ,
× RELATED குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு