×

மாநகராட்சியில் 100 வார்டில் வாக்காளர் படிவம் பெற 200 வாகனங்கள் ஏற்பாடு

கோவை நவ. 26: கோவை மாநகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் நடக்கிறது. வீடு வீடாக வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெற காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதை தவிர்க்கும் வகையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று காலை முதல் கார்களில் வீடு வீடாக சென்று பூர்த்தி செய்த வாக்காளர் விண்ணப்ப படிவங்களை திரும்ப பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சியில் 100 வார்டில் 200 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வாகனங்களில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நேரில் சென்று விண்ணப்ப படிவங்களை திரும்ப பெற உள்ளனர். பொதுமக்கள் தங்களது வாக்காளர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து உரிய முறையில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Goa ,House ,
× RELATED மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடல்...