சென்னை: அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திமுக இளைஞரணி சார்பில் வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார் என்ற பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பாடலை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர். இசையமைப்பாளர் பி.மாரி சக்தி இசையமைத்து, திரைப்படப் பாடகர் மனோ இந்தப் பாடலை பாடியுள்ளார்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:
பாசிச சக்திகளை வீழ்த்தி வேரறுப்போம் என கம்பீரமான வார்த்தைகள் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏகே 47 என்ற பவர்புல் மெஷின்கன்கள் உள்ளது. ஆனால் நமது இயக்கத்தில் எம்கே 24 என்ற ஆயுதம் உள்ளது. அதற்கு அடுத்து எம்கேஎஸ் 53 என்ற ஆயுதம் உள்ளது. தற்பொழுது புதிதாக எம்கேயுஎஸ்77 என்ற புதிய வெப்பன் வந்துள்ளது. எந்த மேடையில் எந்த கருத்தை பேச வேண்டும் என்ற அறிவு சார்ந்த இயக்கமாக நமது இயக்கம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.
