பீஜிங்: ‘தைவான் மீது சீனா கடற்படை முற்றுகை அல்லது வேறு ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஜப்பான் ராணுவ பதிலடி கொடுக்கும்’ என்று ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தொலைபேசியில் பேசினர்.
அப்போது, வர்த்தகம், தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இதுபற்றி சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்ட அறிக்கையில், ‘தைவான் சீனாவுடன் இணைவது போருக்கு பிந்தைய சர்வதேச ஒழுங்கின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று டிரம்பிடம் ஜின்பிங் தொலைபேசியில் கூறியதாக தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையும், இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
