×

தேவாரம் மலையடிவார பகுதியில் குறைகிறது புடலங்காய் விவசாயம்

*ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை

தேவாரம் : தேவாரம் மலையடிவாரத்தில், புடலங்காய் விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் காய்கறி விவசாயங்கள் நடந்தன. இதில் சுமார் 1000 ஆயிரம் ஏக்கர் வரை புடலங்காய் விவசாயம் நடந்தது. இடைக்காலங்களில் மழை இல்லாத நிலையில் இதன் விவசாயம் சுருங்கியது.

காரணம், அனைத்து கண்மாய்கள், குளங்களிலும் மழை இல்லாத நிலையில் வறண்டன. புடலங்காய் விவசாயத்தை பொறுத்தவரை தண்ணீர் மிகவும் அவசியம். புடலங்காய் விவசாயத்தின் பரப்பு குறைந்தாலும், இதனை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனை ஊக்குவிக்க வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thevaram ,Gombai ,Anumanthanpatti ,Pannapuram ,Bodi ,Theni ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 2...