புதுடெல்லி: அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்துவது பணமதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஊரடங்கை நினைவூட்டுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜவின் வாக்குத்திருட்டு இப்போது ஒரு கொடிய திருப்பத்தை எடுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது 19 நாட்களில் 16 பூத்நிலை அதிகாரிகள் இறந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பணிச்சுமையானது பூத் நிலை அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளை தற்கொலைக்கு தள்ளுகின்றது. அன்பானவரை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை திட்டமிடாமல் அவசர அவசரமாக கட்டாயமாக செயல்படுத்துவது பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஊரடங்கை நினைவூட்டுகின்றது.
பாஜவின் அதிகாரப்பசியானது தற்கொலைக்கு கட்டாயப்படுத்தவும், அரசியலமைப்பை துண்டாக்கவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும் தூண்டுகின்றது\\” என்று தெரிவித்துள்ளார்.
