×

நிருபருக்கு கொலை மிரட்டல் சீமான் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் காலதாமதம் செய்யப்படுவதாக தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘மெட்ரோ ரயில் திட்டமே ஒரு தோல்வியான திட்டம்’ என சீமான் கூறினார்.

அப்போது, வளர்ச்சி திட்டம் வேண்டாமா? என நிருபர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆவேசமான சீமான், ‘எது வளர்ச்சி பணி’ என நிருபரை ஒருமையில் பேச தொடங்கினார். தொடர்ந்து, ‘எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சொன்னால் அரசு செய்து தானே ஆக வேண்டும்’ என நிருபர் கூற, ஆவேசமாக இருக்கையில் இருந்து எழுந்த சீமான் நிருபரை பார்த்து, ‘உனக்கு என்ன பிரச்னை’ என கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, ‘ஒரு மைக்கை எடுத்துக்கொண்டு வந்தால், நீ என்ன பெரிய வெங்காயமா?, வெளியே போடா’ என தகாத வார்த்தைகளால் திட்டி அநாகரிகமாக பேசினார். ‘மரியாதையாக பேசுங்கள்’ என நிருபர் கூறியதற்கு, ‘நீ முதலில் மரியாதையாக கேள்வி கேளுடா?’ என மிரட்டும் தொனியில் பேசினார்.

உடனே அவரது ஆதரவாளர்கள் நிருபரை வெளியே இழுந்து சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த செய்தியாளர் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்வில்லியனூர் போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags : Seeman ,Puducherry ,Naam Tamilar Party ,Coimbatore ,Madurai Metro Rail ,Metro Rail ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...