×

பாகிஸ்தானில் பயங்கரம்: 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபர் பக்துன்கவா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய குர்ரம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையே நடந்த சண்டையில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தரப்பில் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இல்லை. பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், இதுபோன்ற பாதுகாப்பு சிக்கல்களும் அங்கு அதிகரித்து வருகின்றன.

Tags : Pakistan ,Islamabad ,security ,Khurram district ,Khyber Pakhtunkhwa ,Afghanistan ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...