தெற்கு அமெரிக்க நாடான ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதே இடத்தில் மற்றொருவரும் கொலை செய்யப்பட்டு உடல் கிடந்த நிலையில், இருவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈக்வடாரில் நடப்பாண்டில் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
