×

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.13.68 லட்சத்திற்கு எள் ஏலம்

கொடுமுடி, நவ.22: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 165 எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.  இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 100 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 152 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 133 ரூபாய் 79 காசுக்கும்,

வப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 133 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 91 ரூபாய் 62 காசுக்கும், இதேபோல் வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 85 ரூபாய் 89 காசுக்கும், அதிகபட்ச விலையாக 115 ரூபாய்க்கும், சராசரி விலையாக 111 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 12,152 கிலோ எடையுள்ள எள் 13 லட்சத்து 68 ஆயிரத்து 586 ரூபாய்க்கு விற்பனையானது.

 

Tags : Kotumudi ,Shivagiri Regulatory Shop ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது