×

பெரம்பலூர் காந்தி சிலை பகுதியில் வியாபாரம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்

பெரம்பலூர், நவ.22: பெரம்பலூரில் வியாபாரம் செய்த பகுதியை எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதி என்று வரையறுத்ததை திரும்பப்பெற வலியுறுத்தி, சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சிஐடியு சார்பாக மனு கொடுக்கப்பட்டது. பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வரும் பகுதியை, வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி என்று பெரம்பலூர் நகராட்சியால் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த வரையறை என்பது நகர விற்பனைக் குழு உறுப்பினர்களிடம் முழுமையாக தெரிவிக்காமல் 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்த பகுதியை எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல், தடை செய்யப்பட்ட பகுதி என்று வரையறுத்ததை திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே முறையிட்டுள்ள நிலையில் தொடர் நடவடிக்கையாக நேற்று, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரை நேரில் சந்திந்து முறையிடசென்று, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் என்பவரிடம் பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சிஐடியு சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் குணசேகரன், மாவட்ட நிர்வாகி மணி, சிஐடியு மாவட்டச்செயலாளர் அகஸ்டின் மற்றும் கிளை நிர்வாகிகள் வெள்ளையம்மாள், பாரதி, ராமசாமி, சுப்பையா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Gandhi statue ,Perambalur ,Roadside Vendors and Sellers Association ,CITU ,
× RELATED அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்