- திருப்பதி கோவில்
- திருமலா
- ஜனாதிபதி
- திரௌபதி முர்மு
- இறைவன்
- திருப்பதி ஏழுமலையான்
- திருப்பதி
- ஆந்திரப் பிரதேசம்
- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திராவில் 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு திருப்பதிக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த பின்னர் இரவு திருமலையில் தங்கினார். இந்நிலையில் நேற்று காலை திருமலை பாரம்பரிய முறைப்படி வராக சுவாமி கோயிலில் வழிபட்டு பின்னர் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் நுழைவு வாயிலில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம நாராயண ரெட்டி, இ.ஓ. அனில்குமார் சிங்கால் முன்னிலையில் இஸ்தி கப்பால் மரியாதையுடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்றனர். பின்னர் ஏழுமலையானை ஜனாதிபதி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதையடுத்து ராம்பகிஜா பஸ் ஸ்டாண்ட் அருகே ஜனாதிபதி வந்தபோது அங்கிருந்த பக்தர்களை பார்த்த முர்மு காரில் இருந்து கீழே இறங்கி பக்தர்களிடம் சிறிது நேரம் உரையாடி அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து திருப்பதியில் இருந்து ஐதராபாத் சென்றார்.
