×

ஆலவயலில் நலத்திட்ட உதவி

பொன்னமராவதி, நவ. 21: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல்,கொப்பனாபட்டி ஆகிய ஊராட்சிகளில் திமுகவின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி ஊராட்சிகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமார், ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி, நகரச்செயலாளர் அழகப்பன், தலைமைசெயற்குழுஉறுப்பினர் ஜெயராமன், விவசாய அணி மாவட்ட தலைவர் அழகப்பன் அம்பலம், ஒன்றிய அவைத்தலைவர் ராமு, முன்னாள் துணைசேர்மன் தனலெட்சமிஅழகப்பன்,

இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் இளையராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர் மேனகாமகேஷ்வரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணைஅமைப்பாளர் சாமிநாதன், நிர்வாகிகள் சீமாட்டி லத்திப், ஆலவயல்முரளி சுப்பையா, லோகநாதன், செல்வம், வினோத்குமார் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் விஸ்வநாதன்,இம்ரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Alavayal ,Ponnamaravathi ,DMK ,Koppanapatti ,Pudukkottai district ,Tamil ,Nadu ,Natural Resources Minister ,Raghupathi ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...