×

எஸ்ஐஆர் பணி பெண் அலுவலர் தற்கொலை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையை சேர்ந்தவர் முபாரக் மனைவி ஜாகிதாபேகம் (37). ஒரு மகன், மகள் உள்ளனர். தனக்கனந்தல் கிராம உதவியாளராக பணியாற்றிய இவர், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட சிவனார்தாங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலராக கடந்த 15 நாட்களாக வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டு வந்தார்.பணிச்சுமையால் மனஉளைச்சல் இருந்த அவர் நேற்று மாலை 5 மணி அளவில் பணியில் இருந்து வீடு திரும்பிய ஜாகிதாபேகம் ஊஞ்சல் சங்கிலியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : SIR ,Thirukovilur ,Mubarak ,Jagitha Begum ,Chandapettai ,Thanakanandal ,Sivanardhangal ,Rishivandhiyam ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...