×

அந்தியூர், பெருந்துறை, பவானி தொகுதிகளில் வருகிற 7, 8ம் தேதி எடப்பாடி பிரசாரம்

சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, வருகிற 7, 8ம் தேதிகளில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, 7ம் தேதி (சனி) அந்தியூர் தொகுதியில் மாலை 4.30 மணிக்கும், 8ம் தேதி (ஞாயிறு) பெருந்துறை, பவானி ஆகிய தொகுதியில் மாலை 4 மணி, 5.30 மணிக்கு பிரசாரம் செய்கிறார். இந்த தொகுதியில் பிரசார பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்ய வேண்டும்.

 

Tags : Edappadi ,Anthiyur ,Perundurai ,Bhavani ,Chennai ,AIADMK ,General ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,
× RELATED இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான்...