×

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு கவுரவம்

 

சென்னை: 56வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவிக்கப்பட உள்ளார். 50 ஆண்டுகால திரையுலக சாதனைக்காக விழாவின் நிறைவு நாளில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவிக்கப்பட உள்ளார். 56வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிப்புக்கான விருதுகளும் நடிகர்களுக்கு வழங்கப்பட உள்ளது. விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்துகின்றன.

Tags : Rajini ,Goa Film Festival ,Chennai ,Rajinikanth ,56th Goa International Film Festival ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...