×

பேஸ்புக் மூலமாக 9 ஆண்டு பழக்கம் பாக். சென்று இஸ்லாமியரை மணந்த இந்திய சீக்கிய பெண்

லாகூர்: பஞ்சாபில் உள்ள கபுர்தலா மாவட்டத்தில் உள்ள அமானிபூர் கிராமத்தை சேர்ந்தவர் சராப்ஜீத் கவுர்(48). குருநானக் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் சென்ற 2000 சீக்கியர்களில் இவரும் ஒருவர்.

நவம்பர் 13ம் பாகிஸ்தானில் இருந்து அனைவரும் திரும்பிய நிலையில் கவுர் மட்டும் திரும்பிவரவில்லை. இதனை தொடர்ந்து அவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக பேஸ்புக் மூலமாக பழகிய பாகிஸ்தானை சேர்ந்த ஹூசைன் என்பவரை சராப்ஜித் கவுர் இஸ்லாமியராக மாறி திருமணம் செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அதனை எதிர்த்து அவர்கள் பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் மதம் மாறி இஸ்லாமியரை மணந்துகொண்ட இந்திய சீக்கிய பெண்ணை சித்ரவதை செய்வதை நிறுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

Tags : Facebook ,Pakistan ,Lahore ,Sarabjeet Kaur ,Amanipur village ,Punjab's Kapurthala district ,India ,Wagah border ,Guru Nanak ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...