×

100 நாள் வேலை திட்டத்தில் இருந்து 27லட்சம் தொழிலாளர்கள் ஒரு மாதத்தில் நீக்கம்: காங்.கண்டனம்

 

 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அக்டோபர் மாதம் 10ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 14ம்தேதி வரை தேசிய வேலை உறுதி திட்டத்தில் இருந்து 27லட்சம் தொழிலாளர்கள் நீக்கப்பட்டதாக கூறும் ஊடக அறிக்கையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஒரு ஒரு மாதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயனாளிகளின் தரவு தளத்தில் இருந்து அக்டோபர் 10ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை 27லட்சம் பெயர்களை அரசு நீக்கியுள்ளது.இது அதே காலத்தில் 10லட்சம் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டதை காட்டிலும் மிகவும் அதிக எண்ணிக்கையாகும். இந்தியாவின் கிராமப்புற ஏழைகளின் வேலைவாய்ப்பு உரிமையை மறுப்பதற்கான மற்றொரு முயற்சியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Congress ,New Delhi ,Congress party ,general secretary ,Jairam Ramesh ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...