×

கொசூரில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

தோகைமலை, ஜன. 6: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கொசூர் ஊராட்சியில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் மாவட்ட பிரதிநிதி அய்யர் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக குளித்தலை எம்எல்ஏ ராமர், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி, மாவட்ட கவுன்சிலர் நந்தினிதேவி தமிழ்செல்வன், கரிகாலன் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. பின்னர் அதிமுக அரசை நிராகரிப்போம் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர். இதில் திமுக நிர்வாகிகள் பழனிச்சாமி, மகாலிங்கம், தங்கராசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK People ,meeting ,Village Council ,Kosur ,
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 95வது...