×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு ஆம்புலன்ஸ் சேவையில் பயனடைந்த 1.30 லட்சம் பேர் 35 ஆயிரம் குழந்தைகள் பிறந்தது

வேலூர், ஜன.6: 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்த ஆண்டு 1.30 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும், 35 ஆயிரம் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் தனது சேவையை தொடங்கியது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்ட இச்சேவையால் ஒவ்வொரு ஆண்டும் பயனடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இச்சேவையில் 700 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை வேலூர் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 811 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 457 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 830 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 166 பேரும் என 4 மாவட்டங்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 264 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதில் சாலை விபத்துக்களில் காப்பாற்றப்பட்டவர்கள் வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 985 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 881 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 268 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 476 பேரும் என மொத்தம், விபத்துக்களில் சிக்கி காப்பாற்றப்பட்டவர்கள் 13 ஆயிரத்து 610 பேர். அதேபோல் பிரசவ காலத்தில் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு குழந்தை பெற்றவர்கள் 4 மாவட்டங்களில் மொத்தம் 35 ஆயிரத்து 170 பேர். இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 7 ஆயிரத்து 770 பேர். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 6 ஆயிரத்து 731 பேர். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 5 ஆயிரத்து 250 பேர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 15 ஆயிரத்து 419 பேர்.

கொரோனா பாதிப்புடன் 4 மாவட்டங்களிலும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் 32 ஆயிரத்து 139 பேர். இவர்களில் வேலூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 770 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 821 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 649 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 899 பேர் அடங்குவர். இவ்வாறு கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ம் தேதி வரை மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 264 பேர் அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore ,Tirupati ,babies ,Ranipettai ,Thiruvannamalai ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...