×

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

டெல்லி: பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. இதில் என்டிஏ கூட்டணி மிக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி + காங். கூட்டணி 51 இடங்களிலும், ஜேடியூ + பாஜக கூட்டணி 188 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் பீகார் தேர்தல் நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா; பீகார் தேர்தல் முடிவுகள் மக்களை தேர்தல் ஆணையம் வீழ்த்திவிட்டது. மக்களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நடக்கும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம். தேர்தல் ஆணையர் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. எஸ்.ஐ.ஆர்., வாக்குத் திருட்டு ஆகியவற்றை மீறி மக்கள் தைரியத்துடன் வாக்களித்துள்ளனர். பாஜகவுக்கு ஆதரவாக தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்படுகிறார்.

எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கிய பின் வேறு என்ன முடிவை எதிர்பார்க்க முடியும்? ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே வெற்றியாளரை அறிவித்துவிட்டால் ஜனநாயகம் எப்படி பிழைக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Election Commission ,BJP ,Congress ,Delhi ,Bihar ,Legislature ,NDA Alliance ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...