×

தமிழகத்தில் 2025-26 பொதுத்தேர்வுகள் தொடக்கம்: 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

 

சென்னை: 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் 2026 பொதுத் தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 0203.2026 முதல் 28.03.2026 வரையும், மேல்நிலை முதலாம் (Arrear) ஆண்டிற்கு 03.03.2026 முதல் 27.03.2026 வரையும் பத்தாம் வகுப்பிற்கு 1103.2028 முதல் 08.04.2026 வரையும் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு ஊக்கத்தினை அளிக்கும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து செய்தி அளித்துள்ளார்கள். ஆட்சியர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கும் நேர்முகக் கடிதம் அனுப்பப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும்
தேர்வுப்பணிகளுக்கு பதுகாப்பு வழங்கிட காவல்துறைக்கும் தேர்வுமையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசுத்தேர்வுகள் தவி பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்திட கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு அலுவலர்கள் மற்றும் இயக்குநர்களுக்கான மாநில அளவில் கூட்டம் 15.02.2026 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் இயக்குநர்கள். துணை இயக்குநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று தேர்விற்கு முந்தைய ஏற்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர் மாவட்டங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் வழித்தட அலுவலர்கள் தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்கள், தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் உறுப்பினர்களுக்கான அறிவுரைக்கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது. மேல்நிலை தாண்டாம் ஆண்டுப் பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 789,692 தனித்தேர்வர்கள் 27501 மற்றும் சிறைவாசித்தேர்வர்கள் 281 என மொத்தம் 827475 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். மேல்நிலை முதலாம் Arrear ஆண்டுப் பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 19:107 மற்றும் தனித்தேர்வர்கள் 5.944 என மொத்தம் 25.051தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் B.R2206 தனித்தேர்வர்கள் 25,801 மற்றும் சிறைவாசித்தேர்வர்கள் 395 மொத்தம் 9,09,002 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.

3412 மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 7545 பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் தேர்வு மையங்களிலும் மேல்நிலை முதலாமாண்டிற்கு(Arrcar) 3812 பள்ளிகளச் சேர்ந்த மாணாக்கர்கள் 2515 தேர்வு மையங்களிலும் பத்தாம் வகுப்பிற்கு 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் 4219 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 7.81528 தேர்வர்கள் 2025-26-شرية ஆண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர் இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45.000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4800 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் 19.943 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அரசாணை நிலை எண்.54 மற்றும் 62 பள்ளிக் கல்வி (அதே)த் துறை. நாள் 29.02.2016 மற்றும் 26.03.2022ன்படி சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல்நிலைப் பொதுத்தேர்வினை 281 சிறைவாசிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 395 சிறைவாசிகளும் தேர்வெழுதவுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நேர்வு மையத்தில் பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லி பள்ளியினை சார்ந்த மாணாக்கர் ஒருவருக்கு திரை வாசிப்பு மென்பொருளைப் பயன்படுத்தி கணினி மூலம் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல் கணிதம் வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்கள் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு பெரிய எழுத்துக்களில் A4 அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (Logarithmic books) 20.000 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்திற்கும் தேர்வர்கள் Ordinary Calculator without Programming பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்விற்கு வருகைபுரிந்த மாணாக்கர்களுக்கு வினாத்தாட்கள் வழங்கியபின்னர், ஒவ்வொரு தேர்வறையிலும் மீதமுள்ள வினாத்தாட்களை தேர்வறைக் கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் உறையிலிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. சீலிடும் இந்நடைமுறை முறை காரணமாக வினாத்தாட்களின் மந்தணத்தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.

இவ்வாண்டு நேரடி தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரி உறுதி செய்யவும், சார்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணாக்கர்கள் / தேர்வர்கள் பொதுமக்கள் தேர்வுகள் தொடர்பான புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9498383075 மற்றும் 9498383076 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவித்து பயன்பெற அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை பொதுத்தேர்வு வினாத்தாட்கள் தொடர்பாக தேர்வு நாட்களில் அன்றைய தேர்வுக்குரிய வினாத்தாட்கள் குறித்த புகார்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை மாணாக்கர்கள் தேர்வர்கள் பொதுமக்கள் dgequestionpaperqueries@gmail.com என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

 

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED மெக்காவில் சிக்கியுள்ள தமிழ்நாடு...