×

துணை தேர்தல் அலுவலர்கள் 31 தொகுதிகளுக்கு நியமனம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கான துணை தேர்தல் அலுவலர்களின் பட்டியலில் திருத்தம் செய்து புதிய அலுவலர்களை நியமித்துள்ளது.

அதன்படி சென்னை மாவட்டமான ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர், ராயபுரம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு தாசில்தார் மற்றும் சிறப்பு தாசில்தார்கள் பதவிகளில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலாப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களின் தொகுதிகளான மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர், அவிநாசி, ஆலங்குளம், ராதாபுரம், கன்னியாகுமரி ஆகிய 31 தொகுதிகளுக்கு துணை தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Election Commission ,Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Archana Patnaik ,Election Commission of India ,Tamil Nadu State Legislative Assembly ,Chennai district ,R.K. Nagar ,
× RELATED வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி...