×

தெருக்களின் விவரங்கள் 6 மாதத்துக்குள் ஆன்லைனில் பதிவேற்றம்: ஐகோர்ட் கிளையில் மாநகராட்சி பதில்

மதுரை: மதுரையில் உள்ள தெருக்களின் விவரங்கள் 6 மாதத்துக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 6 மாதத்துக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என மாநகராட்சியின் பதிலை ஏற்று வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைத்துள்ளது. மதுரையில் தெருக்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி மதுரையைச் சேர்ந்த தேசிகாச்சாரி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Tags : Court ,Madurai ,High Court ,Madurai… ,
× RELATED நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்...