- ஏர் இந்தியா
- சென்னை
- துபாய், சிங்கப்பூர்
- சென்னை விமான நிலையம்
- துபாய்
- சிங்கப்பூர்
- தில்லி,
- மும்பை
- சென்னை சர்வதேச விமான நிலையம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 4 முதல் 7 மணிநேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் துபாய் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுமார் 7 மணிநேரம் தாமதமாக நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 170 பயணிகளுடன் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது.
அதேபோல், சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் 6 மணி நேரம் தாமதமாக 11.30 மணியளவில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. சென்னை – மும்பை, சென்னை – டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் சுமார் 4 மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது. ஏர் இந்தியா விமானங்கள் 4 முதல் 7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு, தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் இப்போது ஏர் இந்தியா விமானங்களும், பைலட்டுகள், விமான பொறியாளர்கள் இல்லாமல் தாமதமாக இயக்கப்படுவது பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
