×

அசைவ உணவு சாப்பிட்டதாக திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்..!!

ஆந்திரா: அசைவ உணவு சாப்பிட்டதாக திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள அலிபிரி பகுதியில், தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்த நிலையில், தேவஸ்தான ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக YSR காங்கிரஸ் கட்சியினர் வீடியோ வெளியிட்ட நிலையில் அலிபிரி அருகே அசைவ உணவு உட்கொண்டதற்காக ராமசாமி மற்றும் சரசம்மா ஆகிய 2 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். திருமலையில் அசைவம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், அவர்கள் இருவர் மீது ஆந்திர பிரதேச அறநிலைய சட்டம் பிரிவு 114-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirupathi Devastana ,Andhra ,Alibri ,Tirupathi Eummalas ,Devasthani ,
× RELATED தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு...