×

சேறும், சகதியுமாக மாறிய வாரச்சந்தை திருச்சியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு 5,698 பேர் எழுதினர்: 5.067 பேர் ஆப்சென்ட்

திருச்சி, ஜன.4: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு திருச்சி மாவட்டத்தில் 36 மையங்களில் நடந்தது. இதில் மாவட்டத்தில் 10,765 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்ட நிலையில் 5,698 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 5,067 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் அனைத்து தேர்வு மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு மையங்களின் நுழைவு வாயில்கள் 9.15 மணிக்கு மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் 15க்கும் மேற்பட்டோர் ஒரு நிமிடம் முதல் 5 நிமிடம் வரை தாமதமாக வந்தனர். அவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அனுமதிக்காததால் வேறுவழியின்றி அவர்கள் தேர்வு எழுதாமலே வீடுகளுக்கு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பல்வேறு தேர்வு மையங்களில் இதுபோல் தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் வரை திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Warachchandai Trichy ,DNPSC Group 1 ,
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான...