×

கூட்டம் கூடினால் கடும் நடவடிக்கை பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், டிச. 31: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பெரம்பலூரில் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள், மின்சார சட்ட திருத்தம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். பொதுத்துறை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (30ம் தேதி) நாடு முழுவதும் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூரில் சிஐடியூ அமைப்பு சார்பில் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், ரங்கநாதன், ரங்கராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி வரதராஜ், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி தர்மராஜ், நகராட்சி ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags : protest ,CITU ,Perambalur ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...