×

ஒகேனக்கல்லில் 6 நாளுக்குப்பின் பரிசல் இயக்கம்

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 9,500 கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. இதனால் 6 நாட்களுக்குப்பின் பரிசல் சவாரிக்கும், அருவிகளில் குளிக்கவும் அனுமத்க்கப்பட்டது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 25,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 7,000 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து 15,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 9வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

Tags : Okanakal ,Métour ,Okanakal Caviri ,Mattur Dam ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...