×

சாட்சியை மிரட்டினால் காவல்துறை நேரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி : சாட்சியை மிரட்டினால் காவல்துறை நேரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியை மிரட்டிய வழக்கில் கேரள ஐகோர்ட் அளித்த பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சய்குமார், ஆலோக் அராதே அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அதில், “பொய் சாட்சியம் அளிக்க சாட்சியையோ, அவருக்கு வேண்டியவர்களை மிரட்டுவது தண்டனைக்குரிய குற்றம். சாட்சியை மிரட்டினால் காவல்துறை நேரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம். சாட்சிகள் மிரட்டப்பட்டால் நேரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சாட்சியை மிரட்டுவது தண்டனைக்குரிய குற்றம், வழக்குப் பதிய நீதிமன்றத்தின் புகார் தேவையில்லை. மிரட்டப்பட்ட சாட்சியை நீதிமன்றத்தை அணுக சொல்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியை மிரட்டிய வழக்கில் பிணை வழங்கி கேரள ஐகோர்ட் அளித்த உத்தரவை ரத்து செய்கிறோம், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags : Supreme Court ,Delhi ,Kerala High Court ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...