நெல்லை: சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய திட்ட நிதிகளை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டுகிறது. மக்களுக்கு அதிக சேவை செய்த திமுக கூட்டணி வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறும். அதானி மோடியின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். அவர் விமான நிலையம் உள்ளிட்ட எதை கேட்டாலும் மோடி கொடுத்துவிடுவார். எல்ஐசியில் கூடுதல் பங்கு கேட்டால் கொடுத்து விடுவார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது. முதல்வருக்கு உள்ள பழக்கம், இரவாக இருந்தாலும் சென்று மக்களுக்கு உதவுவார். அதுபோல் விஜய்க்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எப்போது தூங்கணும், எப்போது எழ வேண்டும், எப்போது சாப்பிடலாம், எவ்வளவு நேரம் பயணிக்கணும் என ஒரு ஷெட்யுல் இருக்கிறது. அதன்படி அவர் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
