×

அந்தியூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கல்

 

அந்தியூர், அக். 28: அந்தியூர் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
கண்களில் உள்ள விழித்திரை நிறமிகளை உற்பத்தி செய்து குறைவான வெளிச்சத்தில் பார்க்கவும், வண்ணங்களை காணவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், மூச்சுக்குழாய் புற்றுநோய் வராமல் தடுக்கவும் வைட்டமின் ‘ஏ’ சத்தானது உதவுகிறது.
பச்சை நிற கீரைகள், மஞ்சள் நிற பழங்கள், காய்கறி, மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவுகளில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் உள்ளது.

Tags : Anthiyur Primary Health Centres ,Anthiyur ,Anganwadi ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது