- டிஜிபி
- தேவர் குருபூஜை விழா
- பசும்பொன்
- சென்னை
- வெங்கட்ராமன்
- தேவர் குருபூஜா
- குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா
- முத்துராமலிங்க தேவர்
- Kamudi
- ராமநாதபுரம் மாவட்டம்
- முதல் அமைச்சர்
- மு.க.ஸ்டாலின்…
சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பசும்பொன்னில் டிஜிபி வெங்கட்ராமன் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை, ஜெயந்தி விழா வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காங்கிரஸ், பாஜக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த வருகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி (பொ) வெங்கட்ராமன் நேற்று பசும்பொன்னில் ஆய்வு நடத்தினார். பின்னர் ஹெலிபேட் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அவருடன் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி, ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஸ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
