×

எரிசக்தி வர்த்தகம் குறித்து அமெரிக்க துணை செயலருடன் இந்திய தூதர் வினய் சந்திப்பு

வாஷிங்டன்: இந்திய எரிசக்தி பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் எரிசக்தி வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க துணை செயலாளருடன் இந்திய தூதர் வினய் மோகன் விவாதித்தார். இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதியை அடுத்த மாதத்திற்குள் முடிப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. கடந்த மாதம் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூயார்க்கிற்கு வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக தனது பிரதிநிதிகள் குழுவுடன் சென்றிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் மற்றும் எரிசக்தி துறை துணை செயலாளர் ஜேம்ஸ் டேன்லி ஆகியோர் நேற்று சந்தித்தனர். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்தியா-அமெரிக்கா இடையேயான எரிசக்தி பாதுகாப்பு கூட்டாண்மை, எரிசக்தி வர்த்தம் மற்றும் இரு நாடுகளின் உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

Tags : Vinay Mohan ,US ,Deputy Secretary ,Washington ,Ambassador ,India ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...