×

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் கார்பரேட் கம்பெனிகளுக்கு சிகப்புக் கம்பளம் மத்திய அரசு மீது திமுக பொறுப்பாளர் குற்றச்சாட்டு

சின்னமனூர், டிச. 30: சின்னமனூர் கருங்கட்டான்குளம் காளியம்மன் கோயில் பகுதியில் நகர, ஒன்றிய, தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட துணைப்பொறுப்பாளர்கள் மனோகரன், மயில்வாகனன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோவன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ‘திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தை, தமிழக அரசின் தடையை மீறி நடத்தி வருகிறோம். அதிமுக அரசு வழக்கு தொடரட்டும் பார்க்கலாம்.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 450 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 4 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு இனி ரேஷன் கார்டு கிடையாது. இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே தேசம் என்ற குறிக்கோளை அமல்படுத்தினால் ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்கள் தெருவில் நிற்பர். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தையும், மக்களையும் வஞ்சித்து விட்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். அப்போது பொதுமக்களின் கஷ்டங்கள் தீரும்’ என்றார். இதற்கான ஏற்பாட்டை முத்துக்குமரன் செய்திருந்தார்.

Tags : DMK ,government ,
× RELATED 3 ஆண்டுகளை நிறைவு செய்த திமுக அரசு:...