- பாஜக
- மீரட்
- சத்யம் ரஸ்தோகி
- கிசான் மோர்ச்சா
- துணைத் தலைவர்
- விகுல் சப்ரானா
- தேஜ்கரி
- மீரட், உத்தரப்பிரதேசம்
மீரட்: உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள தேஜ்கரி பகுதியில் கடந்த 19ம் தேதி உணவகத்திற்கு வெளியே வாகனம் நிறுத்தியிருந்தது தொடர்பாக துணி வியாபாரி சத்யம் ரஸ்தோகி மற்றும் பாஜ கிசான் மோர்ச்சா துணை தலைவர் விகுல் சப்ரானா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சப்ரானா, வியாபாரி சத்யத்தை சாலையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில்,அவரது நடத்தை கட்சி ஒழுக்கத்திற்கு எதிரானது என்று கூறி துணை தலைவர் பதவியில் இருந்து விகுல் சப்ரானாவை சஸ்பெண்ட் செய்து கிசான் மோர்ச்சா பிராந்திய தலைவர் தேஜா குர்ஜார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
