×

முஸ்லிம் என்பதால் புறக்கணிக்கப்பட்டார்; சர்பிராஸ் கானை கிரிக்கெட் அணியில் சேர்க்காதது ஏன்..? காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: தென் ஆப்ரிக்கா ஏ கிரிக்கெட் அணியுடன் மோதும் இந்தியா ஏ அணி அறிவிக்கபப்பட்டுள்ளது. அணியில் இருந்து மும்பை வீரர் சர்பிராஸ் கான் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் அணியில் எடுக்காமல் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷமா முகமது எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,சர்பிராஸ் கான் தனது குடும்ப பெயரை கொண்டிருப்பதால் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பது எங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜ செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவாலா பதிவிடுகையில், இந்த பெண்(ஷமா முகமது) மற்றும் அவரது கட்சியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஷமா முகமதுவும், அவரது கட்சியும் இந்திய அணியையும் மத ரீதியாக பிளவுப்படுத்த முயற்சிக்கின்றனர்.அதே அணியில் முகமது சிராஜூம், கலில் அகமதுவும் இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் முன்னாள் பாஜ எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sarfaraz Khan ,Congress ,New Delhi ,India ,South ,Africa ,Mumbai ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்